Thursday 16 October 2014

குபேரர் இரகசியம்




குபேரர் இரகசியம்

1.       சுத்தம் (வீடு, அலுவலகம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்)
2.       ஊக்கம், சுறுசுறுப்பு (எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்)
3.       வந்த பணத்தை மதிக்க வேண்டும். வராததைப் பற்றி கோபப்படக் கூடாது.
4.       பண வறட்சி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். (சேமிப்பு எப்பொழுதும் இருக்க வேண்டும், குறைந்த பட்சம் 500 ரூபாயாவது எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்படியே எடுத்தாலும் உடனடியாக உயிர் போகின்ற அவசரத்தில் அதை மீண்டும் சேர்க்க வேண்டும் (கடன் வாங்கி அல்ல, உழைத்து).
5.       கணக்கு வைத்து வாழ வேண்டும் (கணக்கு வைத்து வாழ்பவரிடம், கணக்கில்லாமல் செல்வம் சேரும். கணக்கு நோட் வைத்து தினமும் வரவு, செலவு கணக்கு எழுதி பார்க்க வேண்டும். நிச்சயமாக எழுத வேண்டும்.)
6.       அடிப்படை வாழ்வை முதலில் சேர்க்க வேண்டும் (வீடு, நிலம்). பின்பு தான் ஆடம்பர வாழ்விற்கு செல்ல வேண்டும் (கார், பங்களா).
7.       income ஒன்று இருந்தால் கண்டிப்பாக outgoing  ஒன்று இருக்க வேண்டும். அதாவது 1000 ரூபாய் சம்பாரித்தல் நிச்சயமாக 10 ரூபாய் தானம் செய்ய வேண்டும்.
8.       இரகசியம் காப்பாற்ற பட வேண்டும். (633வது திருக்குறளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்)
9.       யாரையும் போட்டியாக நினைக்க கூடாது. போட்டி தெய்வங்களுக்கு மிகப்பெரிய எதிரி.
10.   தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கை பிடிப்போடு இருக்க வேண்டும். systematic ஆக இருக்க வேண்டும். (நேர கணக்கு போட வேண்டும்.)
6 மணி முதல் 7 மணி வரை – கலைக் கடன்கள், காப்பி, பேப்பர்
7 மணி முதல் 8 மணி வரை – குளியல், துணி சலவை
8 மணி முதல் 9 மணி வரை – உணவு, வேலைக்கு தயாராதல்
   இவ்வாறு உங்களுக்கு ஏற்றவாறு கணக்கு வைத்து பழக வேண்டும்.

11.   சொந்தங்களை தொழிலில் போடக்கூடாது. அவ்வாறு போட்டாலும் அன்பு வேறு, தொழில் வேறு என்று புரிய வைத்து, தொழிலில் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் செய்ய வேண்டும். அவ்வாறு குறைபாடுகள் அல்லது தவறுகள் ஏற்பட்டால் கண்டிக்க வேண்டும். மீண்டும் நடந்தால் நிச்சயமாக அவர்களை தொழில் இருந்து நீக்க வேண்டும். ஏன் என்றால் அன்பு வேறு, தொழில் வேறு.

இவைகளை கடைபிடிப்பது சாதாரணம் அல்ல. அவ்வாறு கடைப்பிடித்தால் நிச்சயம் நாமும் குபேரர் அருள் பெறலாம்.