Tuesday 18 August 2015

அள்ள அள்ள செல்வம் பெற எளிய பரிகாரம்

அள்ள அள்ள செல்வம் பெற எளிய பரிகாரம்







யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை.பல பெரிய, நடக்க முடியாத விஷயங்களுக்கெல்லாம் முற்காலத்தில் யந்திரங்கள் உபயோகித்து பயன் அடைந்துள்ளனர். இது, நம் நாட்டில் மட்டும் அல்ல பல் வேறு நாடுகளிலும் உள்ள நடைமுறையே. இதில் மிக எளிய அனைவரும் வீட்டிலேயே பின்பற்ற கூடிய, அதுவும் ஐப்பசி மாதம் தொடங்க வேண்டிய ஒரு சுலப தன ஆகர்ஷன முறையை இங்கே கொடுக்கிறேன். குபேரர் உருவம் அல்லது படம் வைத்து செய்வது மிக சிறப்பு. (சீனத்து சிரிக்கும் குபேரர் சிலை அல்ல) இது நாளை முதல் ஆரம்பித்து (சனிக்கிழமை-18.10.2014-காலை 10-11 அல்லது மாலை 5-6 தொடங்குவது சிறப்பு.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேர யந்திரத்தை அரிசி மாவினால் பூஜை அறையில் வரைந்து கொள்ளவும் (கோலமிடவும்-மாதிரி கோலமும் கொடுக்கப்பட்டு உள்ளது) பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம். விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும். பின்பு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ளலாம். விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மறு நாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுதும் செய்து வர, குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி செல்வ செழிப்போடு வாழ வைப்பார். மேலும் ஐப்பசி மாதம் முடிந்ததும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்யலாம். குறிப்பு : நாளை மட்டும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில்  தங்களால் முடிந்த நேரத்தில் செய்யலாம். 

மந்திரம் :  ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் வித்தேஸ்வராய நமஹ :

தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம்

தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம்

பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது இந்த பரிகார முறை.

இதை வியாழக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும்.

எதிர்பாராத பண வரவு (சிறு தொகையானாலும் கூட)வந்தால் அதை கொண்டு மட்டுமே செய்ய பலன் தரும்.

குறிப்பிட்ட நேரம் எதுவும் இதற்கில்லை.

பணம் வந்தவுடன் செய்யலாம். எந்த நேரமானாலும். ஆண் பெண் இருவரும் செய்யலாம்

(பெண்கள் மாத விடாய் காலங்களில் தவிர்க்கவும்)

வியாழக்கிழமைகளில் எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கவரில் ஏதேனும் ஒரு கை வைத்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும்.

பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும்.

ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.

காயத்ரி மந்திரம் :

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத்ஸ விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோ ந: ப்ரசோதயாத் ||

உச்சரிப்பு முறை தகுந்த நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

(கோவில்களில் உள்ள அந்தணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்-

இப்பொழுது ஸீடீ வடிவிலேயே கிடைக்கிறது)

Friday 7 August 2015

ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்ரம்



தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          1

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்            9.


இந்து மதத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒவ்வொன்றுக்கும் ஸ்லோகங்கள்,
மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை நம்பிக்கையோடு தொடர்ந்து படித்து வந்தால்
நிச்சயம் நல்ல பலன்களை  காணலாம்

மிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் ஒன்று இந்த ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்

கடன் தொல்லை அதிகம் இருப்பவர்கள் இதை 9,18, 36,54 என்ற எண்ணிக்கையில்
தினமும் பாராயணம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்

கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று
நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம்.

இது கைகண்ட முறை. அவர்கள் மட்டுமல்ல. துர் கிரக கோச்சாரம், தசா
புத்தி போன்றவற்றால் துன்பப் படுபவர்களும் நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு

Thursday 6 August 2015

பஞ்சாங்கம் = பஞ்ச அஞ்சகம்

ஜோதிடம் அறிந்தவரோ அறியாதவரோ எவரானாலும் தினமும் காலையில் அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும். விரோதிகள் வலுவிழப்பார்கள். துர் ஸ்வப்னம் (கெட்ட கனவு) மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கா ஸ்நான பலன் ஸித்திக்கும். கோ தானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுப பலன்கள் உண்டாகும். நீண்ட ஆயுளும், எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.
தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம்  கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு (தெரிந்து கொண்டு) அதன் பின்னர் ஸ்நானம் செய்துவிட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பது நல்லது.
பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்தத் திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்தத் திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.
திதி- சந்திரனின் நாளாகும். மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும் (கிருஷ்ண பட்சம்).
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
பிரதமை: வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.
துவிதியை: அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம்  இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.
http://img.vikatan.com/sakthi/2013/10/ytjjzj/images/p102a.jpgதிருதியை: குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).
சதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.  எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில்  கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.
பஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.
சஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.
சப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.
அஷ்டமி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.
நவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.
தசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.
ஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.
துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.
திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.
பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.
அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.
திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.


No
திதி
அதிதேவதை
1
பிரதமை
அக்னி
2
துவிதியை
பிரம்மன்
3
திருதியை
கௌரி (பராசக்தி)
4
சதுர்த்தி
எமதருமனும் விநாயகரும்
5
பஞ்சமி
நாக தேவதைகள்
6
சஷ்டி
கார்த்திகேயன்
7
சப்தமி
சூரியன் (ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடவும்.)
8
அஷ்டமி
சிவன் (ருத்ரன்)
9
நவமி
அம்பிகை
10
தசமி
எமதருமனே
11
ஏகாதசி
ருத்ரன்
12
துவாதசி
விஷ்ணு
13
திரயோதசி

14
சதுர்த்தசி
காளி
15
பௌர்ணமி
பராசக்தி
16
அமாவாசை
சிவன், சக்தி
எண்
கரணம்
அதிதேவதை
1
பவம்
இந்திரன்
2
பாலவம்
பிரம்மா
3
கெளலவம்
சூரியன்
4
தைதுலம்
ஆதித்யன்
5
கரம்
பூமி
6
வணிசை
லஷ்மி
7
விஷ்டி (பத்தரை)
யமன்
8
சகுனி
கலி
9
சதுஷ்பாதம்
ருத்திரன்
10
நாகம்
சர்ப்பம்
11
கிம்ஸ்துக்ன்னம்
வாயு

ஆண் கிழமைகள்
பெண் கிழமைகள்
ஞாயிறு,சனி,செவ்வாய், தேய்பிறை வியாழன்
திங்கள்,புதன்,வளர்பிறை வியாழன்
சூரிய கலை ( 6 to  8 am )
சந்திர கலை ( 6 to  8 am )

எண்
கிரகம்
அதிதேவதை
ப்ரத்யத் தேவதை
பரிகார தேவதை
1
சூரியன்
அக்னி
ருத்ரன்
சிவன்
2
சந்திரன்
நீர்
பார்வதி (எ) கெளரி
பார்வதி
3
செவ்வாய்
பூமி
ஷேத்ரபாலர்கள்
சுப்பிரமணியர்
4
புதன்
விஷ்ணு
ஸ்ரீமந்நாராயணன்
ஸ்ரீமஹாவிஷ்ணு
5
குரு
இந்திரன்
ப்ரம்மன்
ப்ரம்மா
6
சுக்ரன்
இந்திராணி
இந்திரன்
மஹாலெஷ்மி
7
சனி
பிரஜாபதி
யமன்
அனுமான்
8
ராகு
சர்ப்பம்
துர்க்கை
பத்ரகாளி
9
கேது
ப்ரம்மன்
சித்ரகுப்தன்
விநாயகர்

நட்சத்திரங்கள்
அதிபதி கிரகம்
அதிதெய்வங்கள்
கிழமைகளில் பூஜிக்க வேண்டிய தெய்வங்கள்
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்
சூரியன்
 சிவன்



ரோஹிணி,அஸ்தம்,திருவோணம்
சந்திரன்
பார்வதி
1
ஞாயிறு
விநாயகர் ,நவகிரகங்கள்
மிருகசிரீஷம்,சித்திரை ,அவிட்டம்
செவ்வாய்
முருகன்
2
திங்கள்
சிவன்
திருவாதிரை,சுவாதி,சதயம்
ராகு
காளி, துர்க்கை
3
செவ்வாய்
முருகன்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
குரு
பிரம்மா
4
புதன்
விஷ்ணு
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
சனி
யமன் ,சாஸ்தா
5
வியாழன்
தட்சிணாமூர்த்தி
ஆயில்யம்,கேட்டை,ரேவதி
புதன்
விஷ்ணு
6
வெள்ளி
அம்பாள்
மகம்,மூலம்,அஸ்வினி
கேது
விநாயகர்
7
சனி
கண்ணன்
பரணி,பூரம், பூராடம்
சுக்ரன்
லக்ஷ்மி, இந்திரன்




எண்
நட்சத்திரம்
அதிர்ஷ்ட தெய்வம்
அதி கிரகம்
அதி தெய்வம்
யோகம்
அதிதேவதை
1
அஸ்வினி
ஸ்ரீசரஸ்வதிதேவி
கேது             
வினாயகர் 
விஷ்கம்பம்
யமன்
2
பரணி
ஸ்ரீதுர்காதேவி
சுக்கிரன்
மகா லக்ஷ்மி
ப்ரீதீ
விஷ்ணு
3
கார்த்திகை
ஸ்ரீசரஹணபவன்
சூரியன்
சிவன்
ஆயுஷ்மான்
சந்திரன்
4
ரோகிணி
ஸ்ரீகிருஷ்ணன்.
சந்திரன்
சக்தி
செளபாக்யம்
ப்ரம்மா
5
மிருகசீரிடம்
ஸ்ரீசந்திரசூடேஸ்வர்
செவ்வாய்
முருகன்
சோபனம்
பிரகஸ்பதி
6
திருவாதிரை
ஸ்ரீசிவபெருமான்
இராகு
காளி, துர்க்கை 
அத்கண்டம்
சந்திரமா
7
புனர்பூசம்
ஸ்ரீராமர்
குரு
தட்சிணாமூர்த்தி
சுகர்மம்
இந்திரன்
8
பூசம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சனி
சாஸ்தா
திருதி
ஜலம் (நீர்)
9
ஆயில்யம்
ஸ்ரீஆதிசேசன்(நாகம்மாள்)
புதன்
விஷ்ணு
சூலம்
சர்ப்பம்
10
மகம்
ஸ்ரீசூரியபகவான்
கேது      
வினாயகர் 
கண்டம்
அக்னி
11
பூரம்
ஸ்ரீஆண்டாள்தேவி
சுக்கிரன்
மகா லக்ஷ்மி
விருத்து
சூரியன்
12
உத்திரம்
ஸ்ரீமகாலக்மிதேவி
சூரியன்
சிவன்
துருவம்
பூமி
13
ஹஸ்தம்
ஸ்ரீகாயத்திரிதேவி
சந்திரன்
சக்தி
வ்யாகாதம்
வாயு
14
சித்திரை
ஸ்ரீசக்கரத்தாழ்வார்
செவ்வாய்
முருகன்
ஹர்ஷணம்
பகன்
15
சுவாதி
ஸ்ரீநரசிம்மமூர்த்தி
இராகு
காளி, துர்க்கை 
வஜ்ரம்
வருணன்
16
விசாகம்
ஸ்ரீமுருகப்பெருமான்
குரு
தட்சிணாமூர்த்தி
சித்தி
கணேசன்
17
அனுசம்
ஸ்ரீலக்ஷ்மிநாரயணர்
சனி
சாஸ்தா
வ்யதீபாதம்
ருத்திரன்
18
கேட்டை
ஸ்ரீவராஹபெருமாள்
புதன்
விஷ்ணு
வரியான்
குபேரன்
19
மூலம்
ஸ்ரீஆஞ்சனேயர்
கேது          
வினாயகர் 
பரீகம்
விஸ்வகர்மா
20
பூராடம்
ஸ்ரீஜம்புகேஸ்வரர்
சுக்கிரன்
மகா லக்ஷ்மி
சிவம்
மித்ரன்
21
உத்திராடம்
ஸ்ரீவினாயகப்பெருமான்
சூரியன்
சிவன்
சித்தம்
கார்த்திகேயன்
22
திருவோணம்
ஸ்ரீஹயக்கிரீவர்
சந்திரன்
சக்தி
சாத்யம்
சாவித்திரி
23
அவிட்டம்
ஸ்ரீஅனந்தசயனப்பெருமா
செவ்வாய்
முருகன்
சுபம்
லஷ்மி
24
சதயம்
ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர்
இராகு
காளி, துர்க்கை 
சுப்ரம்
பார்வதி
25
பூரட்டாதி
ஸ்ரீஏகபாதர்(சிவபெருமான
குரு
தட்சிணாமூர்த்தி
ப்ராம்யம்
அஸ்வினி குமாரர்கள்
26
உத்திரட்டாதி
ஸ்ரீமகாஈஸ்வரர்
சனி
சாஸ்தா
ஐந்திரம்
பிதா
27
ரேவதி
ஸ்ரீஅரங்கநாதன்
புதன்
விஷ்ணு
வைதிருதி
அதிதி