Wednesday, 17 December 2014

குழந்தைப் பேறு கிடைக்கச்செய்யும் அபிராமி ஸ்லோகம்

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

பொருள் :

திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள்.

வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.

http://www.maalaimalar.com/2014/12/09105108/blessed-with-child-abirami-man.html

No comments:

Post a Comment