Thursday 18 December 2014

தீபம் ஏற்றும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

"துன்பம் அகற்றும் மலை
தொல்வினையை நீக்குமலை,
அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை
தன்பகத்தைக் காட்டுமலை
தன்னைக் கருத்தில் உறும் அன்பர்
இடர் வாட்டுமலை அண்ணாமலை.''

பொருள்:

நம் துன்பங்களைப் போக்குவதும், முற் பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன் பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே.

விளக்கம்: இந்தப்பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. 
 
http://www.maalaimalar.com/2014/12/19104238/deepam-saying-slokas.html

No comments:

Post a Comment